Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு!

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது.

குறிப்பாக ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கிளம்பியுள்ளனர்.

ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்தனர். பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் அதிநவீன பைபர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் ஆழ்கடல் நீச்சல் உடை உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் மீட்பு பணிக்காக சென்றுள்ளனர்.