Wednesday, February 21, 2024
Home » தேசிய சராசரியை முந்தியது: தமிழ்நாட்டில் வாகன விற்பனை அமோகம்

தேசிய சராசரியை முந்தியது: தமிழ்நாட்டில் வாகன விற்பனை அமோகம்

by Kalaivani Saravanan

பொருளாதார வளர்ச்சியால் சாத்தியம் என நிபுணர்கள் கருத்து

இந்திய ஆட்டோமொபைல் துறையில், வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்த மாநிலத்தில் வாகன விற்பனை தேசியசராசரியை முந்தி சானை படைக்கப்பட்டுள்ளது. ஜாட்டோ டைனமிக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 2,22,856 கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 17.04 சதவீத உயர்வாகும்.

இதன்மூலம் பயணிகள் வாகன விற்பனையில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது. முதல் 5 இடங்களில் மகாராஷ்டிரா (391,725 வாகனங்கள்), உத்தர பிரதேசம் (329,571), குஜராத் (293,033), கர்நாடகா (247,902) உள்ளன. இதே காலக்கட்டத்தில் டூவீலர்கள் விற்பனை 4.64 சதவீதம் அதிகரித்து 11,84,559 ஆக உள்ளது. டூவீலர்கள் விற்பனையில் தமிழ்நாடு 3வது இடம் பிடித்துள்ளது. முதல் 2 இடங்களில் உத்தரபிரதேசம் (18,86,483 வாகனங்கள்), மகாராஷ்டிரா (13,52,588) உள்ளன என, ஜாட்டோ டைனமிக் தலைவர் ரவி பாட்டியா தெரிவித்துள்ளார்.

தனிநபர் வருவாய் அதிகரிப்பு, மேம்படுத்தப்பட்ட சாலைக் கட்டமைப்புகள் ஆகியவை தமிழ்நாட்டில் வாகன விற்பனை உயர முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். இதுபோல், ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம், மாநில வாரியாகவும், தேசிய அளவிலும் மாதாந்திர வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் கார்கள் மற்றும் எஸ்யுவிக்கள் விற்பனை, தேசிய சராசரியை விட அதிகமாகவே உள்ளதை காட்டுகிறது. தமிழகத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால்தான் இது சாத்தியமாகியுள்ளது என, வாகனச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா ரேட்டிங்ஸ் அசோசியேட் இயக்குநர் ஸ்ருதி சாபூ கூறுகையில், தேசிய அளவில் வாகன விற்பனை பாதிப்பு அடைந்துள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் மக்களிடையே வாங்கும் திறன் அதிகரிப்பால் பயணிகள் வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் விற்பனையில் வளர்ச்சியைக் காண முடிகிறது’’ என்றார்.

கடந்த ஏப்ரல் – அக்டோபர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை

மாதம் தமிழ்நாடு இந்தியா
விற்பனை மாற்றம் விற்பனை மாற்றம்
ஏப்ரல் 19,685 0.07% 2,82,674 -0.01%
மே 21,609 0.09% 2,98,873 0.04%
ஜூன் 23,479 0.13% 2,95,299 0.05%
ஜூலை 20,885 0.16% 2,84,064 0.04%
ஆகஸ்ட் 23,920 0.13% 3,15,153 0.06%
செப்டம்பர் 22,747 0.06% 3,32,248 0.19%
அக்டோபர் 28,728 0.54% 3,53,990 0.01%

மாதம் தமிழ்நாடு இந்தியா
விற்பனை மாற்றம் விற்பனை மாற்றம்
ஏப்ரல் 94,800 -11% 12,29,911 -7.30%
மே 1,09,322 6.60% 14,93,234 9.32%
ஜூன் 1,21,451 9.70% 13,10,186 6.77%
ஜூலை 1,19,325 15% 12,18,139 8.15%
ஆகஸ்ட் 1,28,996 7.27% 12,54,444 6.30%
செப்டம்பர் 1,16,070 -4.70% 13,12,101 21.7%
அக்டோபர் 1,31,657 18% 15,07,756 -12.6%

You may also like

Leave a Comment

three × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi