உத்திரமேரூர்: தேசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டியில் உத்திரமேரூரைச் சேர்ந்த 4 வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ராதாபாரி சிலுகுரியில் தேசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், ஜூனியர் பிரிவு போட்டிகளில் தமிழகத்தின் சார்பில், உத்தரமேரூரை சேர்ந்த பிரகதீஷ்வரன், தரணிதரன், பென்பிரைசன், வாசிம்ரபிக் ஆகிய 4 மாணவர்களும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களை பல்வேறு தரிப்பினரும் பாராட்டி வருகின்றனர்.