டெல்லி : நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அரசு கட்டிடங்கள், வண்ண விளக்குகளால் ஜொலித்தன. சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதே போல, நாடாளுமன்றக் கட்டிடமும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சட்டமன்ற கட்டிடம் மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது. இதே போல அங்குள்ள சார்பார்க் ரயில் நிலையமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை ரயில் பயணிகள் பார்த்து வியப்படைந்தனர். நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள கங்காபூர் அணை மூவர்ண விளக்குகளால் மிளிர்ந்தது.
இதன் ட்ரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதே போன்று ஜம்மு – காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் பகுதியில் அமைந்திருக்கும் சூரிய கோவில் முழுவதும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து ரசித்த மக்கள் அங்கு புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தன. நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, திரிபுரா மாநிலம், அகர்தலாவில் உள்ள தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அங்குள்ள சட்டமன்றமும் மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது.