சென்னை: ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் திட்டத்துக்கான நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2024-25 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ.2152 கோடி வழங்க வேண்டும். கடந்த ஜூன் மாதமே ஒன்றிய அரசு முதல் தவணையான ரூ.573 கோடியை வழங்கியிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பல முறை கடிதம் எழுதியும் ஒன்றிய அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.