சென்னை: ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் திட்டத்துக்கான நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2024-25 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ.2152 கோடி வழங்க வேண்டும். கடந்த ஜூன் மாதமே ஒன்றிய அரசு முதல் தவணையான ரூ.573 கோடியை வழங்கியிருக்க வேண்டும். முதல் தவணை ரூ.573 கோடியை ஒதுக்க வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாடு அரசு பல முறை கடிதம் எழுதியும் ஒன்றிய அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. ஆர்டிஇ சட்டத்தின்கீழ் 25% இடங்களுக்கான நிதியை எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை ஒன்றிய அரசின் 60% பங்களிப்புடன் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால் சில மாதங்களாக தமிழ்நாடு அரசின் நிதியில் எஸ்.எஸ்.ஏ. திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை ஒன்றிய அரசின் பங்களிப்பின்றி தொடர்ந்து செயல்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்
தமிழ்நாட்டு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்திவைத்தது. சமக்ர ஷிக்ச அபியான் எனப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கான முதல் தவணை ரூ.573 கோடியை ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது.