Friday, April 19, 2024
Home » முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்க தேசிய பிரசாரம்: ஒன்றிய அரசு தொடங்கியது

முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்க தேசிய பிரசாரம்: ஒன்றிய அரசு தொடங்கியது

by Ranjith

புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி, முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதை ஊக்குவிக்க தேசிய பிரசாரத்தை ஒன்றிய அரசு நேற்று தொடங்கியது. வரும் மக்களவை தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் சாதனை படைக்கும் வகையில் வாக்களிக்க முன்வர வேண்டுமென பிரதமர் மோடி தனது மன் கி பாத் வானொலி உரையில் அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, தேசிய பிரசாரத்தை ஒன்றிய அரசு நேற்று தொடங்கியது.

ஒன்றிய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சகம் இணைந்து நடத்தும் இப்பிரசாரத்தை நடத்துகின்றன. இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘‘நமது தேர்தல் செயல்முறையை இன்னும் கூடுதலாக பங்கேற்புடன் மேம்படுத்துவோம். முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் அனைத்து தரப்பு மக்களும் அவரவர் சொந்த பாணியில் வாக்குரிமை விழிப்புணர்வு ஏற்பட அழைப்பு விடுக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 18-19 வயதுக்குட்பட்ட 1.85 கோடி முதல்முறை வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இளம் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிப்பதும், தேசத்தின் பெரிய நன்மைக்காக வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிவிப்பதுமே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.

You may also like

Leave a Comment

ten − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi