சென்னை: 2024ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழக ஆசிரியர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் முரளிதரனையும் ஆளுநர் வாழ்த்தியுள்ளார். கல்வி, புதுமையான கற்பித்தல் முறையில் உங்களின் சிறப்பான அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம். கற்பித்தல், மாணவர் மேம்பாட்டில் சிறந்து விளங்குவதற்கான உயர்தரத்தையும் விருது குறிக்கிறது என ஆளுநர் ரவி கூறியுள்ளார்.