டெல்லி: ஒன்றிய அரசின் 70வது தேசிய திரைப்பட விருதுகான சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் தயாரித்து இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு தேசிய விருதில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.