கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த சிவராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். கந்திகுப்பத்தில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. கிருஷ்ணகிரி நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது 3-வது வழக்கு பாய்ந்தது