சென்னை: சென்னை அருகே குன்றத்தூரில் 200 கிராம் போதைப்பொருள் மற்றும் 5 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா கடத்தி வந்த சக்திவேல்(34), சபினா காத்தூன்(30) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.15 லட்சம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.