ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில், ‘’நாடு போற்றும் நான்காண்டு சாதனை தொடரட்டும் இது பல்லாண்டு’’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஆலந்தூர் தர்மராஜா தெருவில் நடைபெற்றது. ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மாநில சுற்றுச்சூழல் பிரிவு துணைத் தலைவர் சாய்ஜெயந்த், வட்ட செயலாளர் முரளிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் பிருந்தா முரளி கிருஷ்ணன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது “தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளது. தேர்தலுக்காக அமித்ஷா எதுவும் செய்யலாம். வழக்குகளை போடலாம். அத்தனையும் சந்திக்க திமுக சட்டத்துறை தயாராக உள்ளது. வரும் 8 மாத காலம் தொடர்ந்து அயராது பணியாற்றி திமுக மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும்’’ என்றார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது;
வெளிமாவட்ட பெண்கள் 1000 பேர் தங்கும் தோழி விடுதி, ஆலந்தூர் தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி 2 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட உள்ளது. அதற்கு முன்பாக முன்கூட்டியே தற்காலிகமாக நங்கநல்லூர் நேரு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகளை ஒதுக்கி அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த கல்வி ஆண்டில் தொடங்கும். இதுவரை 8000 பேர் அப்ளிகேஷன் போட்டுள்ளனர்’’ என்றார்.
இந்த கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்கே.இப்ராகிம், இரா.பாஸ்கர், ஆர்டி.பூபாலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கலாநிதி குணாளன், அணிகளின் சார்பாக சிகந்தன், சுலைமான், கே.கேண்முகம், தரணிவேந்தன், காஜாமொய்தீன், தர், முனுசாமி, ஹார்பர் குமார ராஜா, மனோகரன், பாண்டியன், மகளிரணி சாந்தி, சத்தீஸ்வரி, நர்மதா கார்த்திக், விஜய்பாபு, விக்கி கலந்துகொண்டனர்.