சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சன் குரூப் தோழியின் மாபெரும் ஷாப்பிங் திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசமாகும். சன் குரூப்பின் ‘‘தோழி” சார்பில் சென்னையில் மாபெரும் ஷாப்பிங் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா சென்னை வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடக்கிறது. அதாவது, இன்று, நாளை, நாளை மறுநாள் என பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த ஷாப்பிங் திருவிழாவில் பெண்களுக்கான அனைத்து ஷாப்பிங்குகளும் ஒரே இடத்தில் பிரமாண்டமாக இடம் பெற்றுள்ளது.
பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், ஹெல்த் கேர் பொருட்கள், மணப்பெண் உடைகள், பேஷன், நுகர்வோர் பொருட்கள், ஜூவல்ஸ், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், பர்னிச்சர்கள், ஊட்டச்சத்து பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள், மருத்துவம், விளையாட்டு உடைகள், ஸ்டேஷனரி பொருட்கள், எலக்ட்ரானிக் ஜேஜெட்டுகள், ஆட்டோ மொபைல், ரியல் எஸ்டேட் என அனைத்து ஷாப்பிங்குகளும் ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக ஷாப்பிங்கில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஷாப்பிங்கை கண்டுகளிக்க அனுமதி இலவசம் ஆகும். காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஷாப்பிங் திருவிழாவை பார்வையிடலாம்.
இதன் தொடக்கவிழா இன்று காலை 10.30 மணியளவில் சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது. கண்காட்சியை தமிழ்நாடு சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தொடங்கி வைக்கிறார். கனரா வங்கி பொதுமேலாளர் கே.ஏ.சிந்து, லைப்லைன் மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி டாக்டர் நடேஷ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் சத்யபன் பெஹேரா, பதஞ்சலி துணைத்தலைவர் பி.வி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றுகின்றனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் எளிதில் பார்வையிடும் வகையில் பொதுமக்களுக்காக பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.