சென்னை: நம்ம ஸ்கூல் நம்ம ஊரு திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்த ரூ.380 கோடி நிதி கிடைத்துள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார். முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் ₹380 கோடி நிதி வந்ததாக அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் அளித்துள்ளார். இவர்களை நம்பி பணம் கொடுத்தால் நிச்சயம் ஒளிவு மறைவின்றி நிதி செலவு செய்யப்படும் என வழங்கியுள்ளனர். ராயப்பேட்டை அரசுப் பள்ளியில் ரூ.1.71 கோடியில் அமைக்கப்பட்ட கணினி ஆய்வகத்தை திறந்து வைத்து உரையாற்றியுள்ளார்.