மதுரை: நடிகை நமீதா சாமி தரிசனம் செய்ய வந்தது குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தரிசனத்துக்காக சென்றபோது இந்து மத சான்றிதழ் வேண்டும் என்று கேட்டதாக நமீதா வீடியோவில் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த நிலையில் நமீதா சாமி தரிசனம் செய்ய வந்தபோது அவரிடம் விவரம் கேட்கப்பட்டு தரிசனத்துக்கு அனுப்பி வைத்தோம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.