நமீபியாவில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக 83 யானைகள், வரிக்குதிரைகள், மான்கள் காட்டெருமைகள் உள்ளிட்ட 723 வன விலங்குகளை வேட்டையாட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத வறட்சியால் நமீபியாவில் சுமார் 14 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமீபியா அரசின் இந்த முடிவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.