நாமக்கல்: நாமக்கல் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடையில் பர்கர் சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதே கடையில் பர்கர் சாப்பிட்ட மேலும் 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் பர்கர் சாப்பிட்டு மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.