நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அடுத்த வரகூரில் அரசு பள்ளி மாணவர்கள் இருவர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் நவலடிப்பட்டியை சேர்ந்த ஆகாஷ் (16) தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து எருமைப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.