சென்னை: எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் இருவர் உயிரிழந்ததற்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வீட்டில் கேஸ் சிலிண்டர் மாற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; “நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் போது எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலிண்டர் நிறுவன ஊழியர் அருண்குமார் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.