நாமக்கல்: வரும் நவம்பர் 1ம் தேதி பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற உள்ளது. இதனை ஒட்டி நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமா அறிவித்துள்ளார். இதற்கு மாற்றாக நவம்பர் 4ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.