நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து விரைவில் அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் இருந்து துபாய், ஆப்ரிக்காவுக்கு ஏற்கெனவே முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என நாமக்கல்லில் அவர் பேட்டியளித்தார்.