Thursday, September 12, 2024
Home » நாமக்கல் கோட்டை

நாமக்கல் கோட்டை

by Lavanya

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகரின் மையத்தில் நாமகிரி என்ற பெயரில் அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும். இந்தக் கோட்டை 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் சமதளமான பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தென்மேற்குத் திசையில் அமைந்துள்ள குறுகலான படிகளின் மூலம் இக்கோட்டையைச் சென்றடைய முடியும். இந்தக் கோட்டையில் நகரின் பிரபல சுற்றுலாத்தலங்களாக ஓரு கோயிலும், மசூதியும் உள்ளன. இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் இருந்த சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது. இதைக் கட்டியவர் மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா என்ற கருத்தும் நிலவுகிறது.

திப்புசுல்தான் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பனியை எதிர்த்துப் போரிட இக்கோட்டையைப் பயன்படுத்தினார். கோட்டைக்கு அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோயில் ஆகியவை புகழ் பெற்றவை. மிகப்பெரிய ஒற்றைப் பாறையாக உள்ள மலையின் உச்சியில் கோட்டை உள்ளது. இங்குள்ள நரசிம்மர் கோயிலும் அரங்கநாதர் கோயிலும் மலையைச் செதுக்கி குடைவரைக் கோயில்களாக அமைக்கப்பட்டவையாகும். மலையின் கிழக்கு பகுதியில் அரங்கநாதர் கோயிலும், மேற்கு பகுதியில் நரசிம்மர் கோயிலும் உள்ளன. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச் சேர்ந்த குணசீலன் கட்டியதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இக்கோயில்களின் மண்டபங்களும் பிற கோயில்களும் பின்னால் கட்டப்பட்டதாகும். நரசிம்மர் கோயிலுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. ஆஞ்சநேயர் கோயிலுக்குக் கோபுரம் இல்லை. இந்தக் கோட்டை தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின்கீழ் பாதுகாக்கப்படுகிறது. மலையின் வடகிழக்கில் கமலாலயக்குளம் உள்ளது. கமலாலயக்குளம் அடிவாரத்தில் இருந்தாலும் கோட்டையுடன் தொடர்புடையதாக உள்ளது. கோட்டை அந்த மலையில் இருந்து வெட்டப்பட்ட கற்களைக் கொண்டே கட்டப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

1 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi