நாகர்கோவில்: நாகர்கோவில் அடுத்த அனந்தநாடார் குடியிருப்பை சேர்ந்தவர் ஆனந்த் (28). சென்னையில் பழ வியாபாரம் செய்து வந்தார். அடிக்கடி வாழ்க்கையில் வெறுப்பாக உள்ளது. சாகப்போகிறேன் என கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று அதிக குடிபோதையில் வந்தவர், கோட்டார் அம்மன் குளம் தெருவில் நடுரோட்டில் நின்றபடி தனது உடலில் தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அப்பகுதியினர் தீயை அணைத்து அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆனந்த் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவிலில் நடுரோட்டில் சென்னை பழ வியாபாரி தீக்குளித்து தற்கொலை
0