கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பழுதாகி நின்றிருந்த அரசு பேருந்தை மாணவிகளை கொண்டு தள்ளவைத்த ஓட்டுநர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக நாகர்கோவிலில் இருந்து மணக்குடிக்கு அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்து சென்று கொண்டிருந்த போது பழுதாகி நின்றது. பின்னர் பேருந்தில் பயணம் செய்த தனியார் கல்லூரி மாணவர்கள் விரைவாக கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக பேருந்தை தள்ளி உள்ளனர்.
பழுதாகி நின்றிருந்த பேருந்தை மாணவிகளை கொண்டு தள்ளவைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளியதால் வீடியோ பரவியதை அடுத்து பேருந்து ஓட்டுநர் பாபு, நடத்துநர் செல்வராஜ், எலக்ட்ரிஷன் கிருஷ்ணன், சூப்பர் வைசர் சுப்பிரமணியம் பிள்ளை ஆகிய 4 பேரை துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்து நாகர்கோவில் போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.