வேதாரணயம், அக்.28: வேதாரண்யம் அடுத்தமறைஞாய நல்லூரில் வேதநாயகி அம்மன் கோயிலில் தனி சன்னதியில் வாராகி அம்மன் அருள் பாலிக்கிறார்.
வளர்பிறைபஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் என 16 வகையான வாசனாதி திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள்மாலை, பூமாலை சாத்தப்பட்டு மகா தீபாராதனையும், சிறப்பு ஆராதனைகளும் கூட்டு வழிபாடும் நடைபெற்றது.
ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வாராஹி அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


