நாகை: நாகை-இலங்கை இடையே வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து சேவை என கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் நிரஞ்சன் அறிவித்துள்ளார். பயணிகள் வருகை போதிய அளவில் இல்லாததால் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் கப்பல் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.15-ம் தேதி வரை புதிய நடைமுறை அமலில் இருக்கும் என கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.