நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 16ம் தேதி துவங்கியது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் சேவை தொடங்கியது. 5 பயணிகளுடன் சென்ற கப்பல், காங்கேசன் துறையில் இருந்து 19 பயணிகளுடன் நாகப்பட்டினம் வந்தது. பயணிகள் முன்பதிவு குறைவாக இருப்பதால், வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு அதிகரித்தால் சேவையில் மாற்றம் செய்யப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.