நாகை: நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் ஒரேநாளில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதால் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர். காலை வெள்ளப்பள்ளம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 மணி நேரத்தில் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மீனவர்களின் 350 கிலோ வலை உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்று இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் செய்துள்ளனர்.