நாகை :நாகை – இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை “செரியாபாணி” பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்குகிறது.துவக்க விழா நிகழ்வில் மத்திய துறைமுக கப்பல் மற்றும் நீர் வழிகள் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்கின்றனர். கப்பல் போக்குவரத்து சேவையை டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.