நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு வாரத்தில் சனிக்கிழமை தவிர மற்ற நாட்கள் இரண்டு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை(16ம் தேதி) வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனையொட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 2 நாட்கள் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கையை தொடர்ந்து நாகப்பட்டினம் இலங்கை காங்கேசன் துறையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் 17ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாகை – இலங்கை கப்பல் சேவை இன்று முதல் 3 நாள் நிறுத்தம்
0