நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் சிலம்புச்செல்வன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்டோபர் 26ம்தேதி அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். மறுநாள் 27ம்தேதி அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதுதொடர்பான வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 12 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை
0