கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காலிகாட் வீட்டில் இருந்து வீரர்கள் தின பேரணியில் பங்கேற்க கொல்கத்தா புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது, கருப்பு கோட் மற்றும் டை அணிந்தவர் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் உள்ளே நுழைய முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் கூர்க்கா கத்தி, கஞ்சா மற்றும் எல்லை பாதுகாப்பு படை உள்பட பல்வேறு பிரிவுகளின் அடையாள அட்டைகள் இருந்தன.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். போலீசாரிடம் தான் முதல்வரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் உள்ளே நுழைய முயன்றதற்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.