மயிலாப்பூர் : நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தேவநாதன் உட்பட 3 பேரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று பிற்பகல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.