சென்னை: மயிலாப்பூர் பஜார் தெருவை சேர்ந்தவர் முகமது அப்துல் (34). தொழிலதிபரான இவர், தனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனித்தனி வீட்டில் சகோதரருடன் வசித்து வருகிறார். இதற்கிடையே நேற்று முன்தினம் உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முகமது அப்துல் மனைவி பீரோ லாக்கரை திறந்து, நகைகளை எடுத்த போது, அதில் 52 சவரன் நகைகள் மட்டும் மாயமாகி இருந்தது. வெளியாட்கள் வீட்டிற்கு வராத நிலையில், லாக்கர் உடைக்காமல் நகைகள் மட்டும் மாயமாகி இருப்பதால், வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தொழிலதிபர் முகமது அப்துல், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.