சென்னை: சென்னை மயிலாப்பூர் அருகே 5 சவரன் நகைக்காக மூதாட்டி செண்பகம் (75) கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டி செண்பகம் தனியாக வசித்துவரும் நிலையில் கடந்த 20-ல் கழுத்து நெரிக்கப்பட்ட தடயங்களுடன் மயக்க நிலையில் கிடந்தார். போலீசார் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.