சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு ஜாமின் வழங்க பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிதி மோசடி தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் உள்ளிட்ட 3 பேர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தினமும் புகார்கள் வந்து கொண்டே இருப்பதால் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.