அந்தமான்: மியான்மர் படகுகளில் கடத்தப்பட்ட 5,500 கிலோ போதை பொருளை அந்தமானில் இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்தது. கைதான 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. வங்கக் கடலில் அமைந்துள்ள அந்தமான் தீவுகள் பகுதியில் இந்திய கடலோர காவல் படை ரோந்து சென்றது. அப்போது மியான்மர் மீன்பிடி படகுகளில் கடத்தப்பட்டு வந்த 5,500 கிலோவுக்கு மேற்பட்ட மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருளை கடலோர காவல்படை கைப்பற்றியது.
இரண்டு கிலோகிராம் கொண்ட 3,000 பாக்கெட்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் இருக்கும் என்கின்றனர். இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 5,000 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை என்றும், தற்போது தான் முதன்முறையாக இவ்வளவு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மாத தொடக்கத்தில், 700 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைனுடன் எட்டு ஈரானியர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கடலோர காவல்படை வட்டாரங்கள் கூறுகையில், ‘அந்தமான் கடற்பகுதியில் படகில் கடத்தப்பட்ட சுமார் ₹20,000 கோடி மதிப்புள்ள 5,500 கிலோ மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருளை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியது.