தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத ஆட்டுக்கறி – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மைதா – 1/2 கிலோ
கறிவேப்பிலை, கொத்தமல்லி – 1 கொத்து
எண்ணெய் – 1 குழி கரண்டி
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஆட்டுக்கறியை கழுவி சுத்தம் செய்து மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். வடித்த தண்ணீரை மைதா மாவில் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவை விட இலகுவாக பிசையவும். பிசைந்ததும் அதன் மீது எண்ணெய் தடவி மூடி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த சின்ன வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்த ஆட்டுக்கறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கறிவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிசைந்து வைத்த மைதா மாவை உருண்டையாக உருட்டி அதில், வதக்கிய மட்டன் மசாலாவை நடுவில் வைத்து போளி வடிவத்திற்கு தேய்த்து தோசை கல்லில் இருபுறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான ஆட்டுக்கறி காரப் போளி தயார்.