சென்னை: தமிழ்நாட்டில் கலகத்தை உருவாக்க பாஜக முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாததால் கலவரம் உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் மிக மலிவான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் கொடி ஏற்றுவது குறித்து உரிய அனுமதியை உரியவர்களிடத்தில் பெற வேண்டும். உரிய அனுமதி பெறாமல், வேண்டுமென்றே கொடி நடுவது, அதனை தடுக்கும் போலீசை தாக்குவது, தரம் தாழ்ந்த செயலில் கலவரத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று சுடக்குரல் எழுப்ப பா.ஜ.க.வினர் முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.