சென்னை: பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் மணிமண்டபம் கட்டப்படும், மிக முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் மற்றொரு மண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.