திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே இம்பாவனத்தில் குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாங்குளம் மற்றும் சாணகுளம் ஆகியவற்றில் பாதை வழித்தடத்தையும் உடைத்து அதிக ஆழத்தில் மண் அள்ளியதால் போராட்டம் நடத்தினர். மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் குளக்கரையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.