சென்னை : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் பெருமளவு குணமடைந்து வந்துள்ளார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தோழர் இரா. முத்தரசன் அவர்கள் உடல் நலப் பாதிப்பு காரணமாக கடந்த 04.10. 2023ம் தேதி திருச்சி காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது சுவாசப் பாதையிலும், நுரையீரல் பகுதியிலும் கடுமையான கிருமிகளின் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.
காவேரி மருத்துவ மனை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையில் தற்போது தோழர் இரா. முத்தரசன் பெருமளவு குணமடைந்து வந்துள்ளார். *இன்னும் இரண்டொரு நாளில் வீடு திரும்பும் வாய்ப்பு* ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும், தோழர் இரா. முத்தரசன் *மேலும் இரண்டொரு வாரங்கள் முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும்* என்பதும் மருத்துவர்கள் அறிவுரையாகும். *அடுத்த பதிவில் எப்போது வீடு திரும்புவார் என்கிற தகவலை தருகிறோம்* . அவரை சந்தித்து நலம் விசாரிக்க வருவோர் மருத்துவர்கள் அறிவுரையை பின்பற்றி, அணுக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம,” என்று குறிப்பிட்டுள்ளார்.