தேவையானவை:
தோல் விதை நீக்கி சிறியதாக நறுக்கிய பரங்கிக்காய் – ½ கிலோ, உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் பொடி,
வெல்லம் – சிறிது.
அரைத்துவிட:
தேங்காய் – ஒரு சிறிய மூடி,
கடுகு – ½ டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 2.
தாளிக்க:
நெய் – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா ½ டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை:
வாணலியில் நெய் சூடாக்கி தாளிக்கும் பொருட்கள் தாளித்து, நறுக்கிய பரங்கிக்காய், உப்பு, மஞ்சள் பொடி, சிறிது நீர் தெளித்து ¾ பங்கு வெந்தவுடன், அரைக்கும் பொருட்களை நன்கு மசிய அரைத்து காய் கலவையை சேர்த்து நன்கு கிளறி, வெல்லம் சேர்த்து புரட்டி சற்றே தளர இருக்கையில் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். இது ஒரு சைட் டிஷ். அருமையாக இருப்பதுடன் வயிறு நிரம்பிவிடும்.