தேவையானவை
மசூரி பருப்பு – 250 கிராம்,
தோல் சீவிய இஞ்சி – 2 அங்குலம்,
பச்சை மிளகாய் -2,
நுணுக்கி நறுக்கிய முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி,
மல்லித்தழை – கறிவேப்பிலை – சிறிதளவு,
சிறு சிறு துண்டுகளாக தேங்காய் – 4 ஸ்பூன் அளவு,
மிளகு – 1 டீஸ்பூன்,
வெண்ணெய் – 50 கிராம்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை
முதலில் மசூரி பருப்பை நன்கு கழுவி 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் நன்றாக ஊறிய பருப்பை ஒரு மிக்ஸியில் போட்டு இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அடை மாவு வரும் பதத்திற்கு ஏற்றபடி சிறிதுசிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த மாவில் நறுக்கிய கீரை, மல்லி, கறிவேப்பிலை, மிளகு, தேங்காய் துண்டு சேர்த்து நன்கு கலக்கி தோசைக்கல் சூடான பிறகு அதில் சிறிது வெண்ணெய் தடவி அடையா ஊற்றவும். பின்பு ஊற்றிய அடையில் இருபுறமும் நன்கு சிவந்து வெந்ததும் எடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சத்தான ருசியான மசூரி பருப்பு முருங்கைக் கீரை அடை தயார். இந்த அடையை கீரை சேர்க்காமலும் செய்யலாம்.