புதுடெல்லி: மோடிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ராஜ்யசபா எம்பி கபில் சிபல் அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடியின் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு தொடர்பாக, அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
பெண்களின் சொத்துக்களை ஊடுருவல்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளிடம் காங்கிரஸ் ஒப்படைக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். நாட்டின் அரசியல் இந்த அளவுக்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. வரலாற்றில் இதுபோல் எந்த பிரதமரும் பேசியதில்லை. இதுபோன்று இனியும் யாரும் பேசிவிடக்கூடாது. இவ்விசயத்தில் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் தேர்தல் ஆணையம் மவுனமாக உள்ளது’ என்று கூறினார்.