செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் பகுதியில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான தனிமயானம் இல்லை. இதற்காக பல முறை மனு கொடுத்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பாஜவினர் மற்றும் இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்று மயானம் வழங்கக்கோரி மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் போலீசார் பேரணிக்கு அனுமதி கொடுக்காமல் கலெக்டரிடம் மனு அளிப்பதற்கு மட்டும் அனுமதி அளித்தனர். தொடர்ந்து பேரணியை கைவிட்டு நேரடியாக கலெக்டர் அலுகத்திற்குச் சென்ற இஸ்லாமியர்கள், பாஜக சிறுபான்மையினர் மாநிலச் செயளாலர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கூறினர்.