கோவை: ஆங்கிலம் குறித்த அமித்ஷாவின் கருத்து தவறில்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று கோவை வந்தார். அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ழடி அகழாய்வு குறித்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவாக விளக்கமாக பதில் அளித்துள்ளார். ஆங்கிலம் தொடர்பாக அமித்ஷா அவரது கருத்தை சொல்லியுள்ளார். அதில் தவறில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. அதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லலாம். தாய்மொழி என்பது முக்கியம் என அமித்ஷா சொல்லியுள்ளார்.
அனைவருக்கும் தாய்மொழி என்பது மிக மிக முக்கியம். தாய் மொழிக்கு தரும் முக்கியத்துவத்தை விட, ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் என்ற பொருள்பட அவர் சொல்லியுள்ளார்.ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபாடு செய்ய ஜனநாயகத்தில் உரிமை உள்ளது. ஜனநாயக நாட்டில் இந்து முன்னணி மதுரையில் முருகர் மாநாடு நடத்துவதற்கு வாழ்த்துகள். யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அதனை பிரதமர் முன்னின்று நடத்தி இருப்பதற்கு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் கூறினார்.