சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் முருகன் கோயில்களுக்கான சுற்றுலா முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் பேருந்து மாலை வந்தடையும். சுற்றுலாவில் வல்லக்கோட்டை, குன்றத்தூர், திருப்போரூர், திருவான்மியூர் முருகன் கோயில்களில் தரிசனம் செய்யப்படும். மேலும் விவரங்களை 180042531111, 044-25333333, 044-25333444 (or) www.ttdconline.com தெரிந்து கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.