சென்னை : முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பட்ட பெரியார், அண்ணா பற்றிய வீடியோவிற்கு அதிமுக வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ மூலம், “அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடுதான் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோம்;
பெரியார், அண்ணா குறித்த அவதூறான வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை”எனத் தெரிவித்துள்ளார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பட்ட பெரியார், அண்ணா குறித்த அவதூறுகளுக்கு அதிமுக கண்டனம்!!
0