மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மாநாட்டுக்கு வரக்கூடியவர்கள் வாகன காப்பீடு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டையை போலீசாரிடம் வழங்க வேண்டும். ஆவணங்களை காட்டி போலீசாரிடம் பதிவு செய்த பின்னர்தான் மாநாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. நீதிமன்ற உத்தரவின்படி உரிய ஆவணங்கள் இல்லையெனில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் காவல்துறை சோதனை மையம் அமைக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை: ஐகோர்ட் கிளை
0